ஆலயக்கதவு திறந்த அதே தினம் ஆலயத் தலைவர் மரணமான சம்பவம் சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தில் நேற்று (11) செவ்வாய்க்கிழமை இரவு இடம் பெற்றது.
சம்மாந்துறை, கோரக்கர்கிராம அகோரமாரியம்மன் ஆலயம் மற்றும் கோரக்கர் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் தலைவர் ம.பாலசுப்பிரமணியம்( வயது 66)என்பவரே இவ்வாறு இறைபதமடைந்தவராவார்.
நேற்று செவ்வாய்க்கிழமை(11) காலை வருடாந்த தீமிதிப்பு திருவிழா உற்சவத்திற்காக ஆலயபூசகர் மு.ஜெகநாதன் தலைமையில் கடல் நீர் எடுத்து வந்து ஆலயக் கதவு திறக்கப்பட்டது.
அன்றிரவு 7 மணியளவில் ஆலய பரிபாலன சபையின் தலைவர் பாலசுப்பிரமணியம் இறைபதமடைந்தார்.
புதன்கிழமை (12) அவரது பூதவுடல் கோரக்கர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கடந்த 25 வருடகாலமாக இறைபணி செய்த அவரின் மரணச் செய்தி பலரது மனங்களையும் நெகிழச்செய்தது.
( வி.ரி சகாதேவராஜா)