இலங்கை மலையகத் தின் இலக்கியச் சுடராக ஒளிர்ந்து, சிறுகதை, நாவல், திரைக்கதை, இதழியல், ஆய்வு இலக்கியம் புனைவு, அபுனைவு, ஆய்வு ஆவண சேகரிப்பு என ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் பொதுவாகவும் மலையக இலக்கிய உலகில் தனித்துவமாகவும் வலம் வந்த எழுத்துலகில் பன்முக ஆளுமையாக வாழ்ந்து மறைந்த ‘தெளிவத்தை ஜோசப்’ அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு 26ஆம் திகதி அவரது பிறந்த ஊரான பதுளை, தெளிவத்தையில் இடம்பெறவுள்ளது.
நினைவு நிகழ்வுடன் , ‘ஆவணகாப்புக்கான தெளிவத்தை ஜோசப்’ நினைவு விருது – 2024 ஆவணக்காப்பாளர் மலையக விக்கிபீடியா என அழைக்கப்படும் வட்டகொட சுப்பையா இராஜசேகரனுக்கு தெளிவத்தை ஜோசப் ஆய்வகம் ஆவணவகம் வழங்கி வைக்கின்றது.
பாக்யா பதிப்பகமும் பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டமும் இணைந்து நடத்தும் இந்நிகழ்வில், தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘மாறுதல்கள்’ நாவல் அறிமுகமும் இடம்பெறும்.
2023 ஆம் ஆண்டுக்கான ‘தெளிவத்தை ஜோசப’ கௌரவ விருது புலம்பெயர் எழுத்தாளர் மு.சி.கந்தையா -வுக்கு வழங்கி வைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.