இந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தி்க்க முடிந்தமையை நான் பெற்ற கௌரவமாக கருதுகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
இது பொருளாதார ஒத்துழைப்பை விட கிடைத்த ஆழமானதொரு வாய்ப்பாக நான் கருதுகிறேன். இது நமது நாடுகளுக்கிடையேயான ஆழமான கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்கான அழைப்பாகும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொருந்தும் கூட்டு முன்னேற்றத்தை உள்ளடக்கிய எதிர்காலத்தை வடிவமைக்க ஒரு வாய்ப்பு காணப்படுகின்றது. இங்கு வர்த்தகம் மட்டுமல்லாது, நமது மக்களினது நல்வாழ்வைக் கொண்டும் அபிவிருத்தி அளவிடப்படும்.
மேலும், கடந்த காலங்களில் இலங்கை சந்தித்த இக்கட்டான தருணங்களில் இந்தியா வழங்கிய தளராத ஆதரவு தொடர்பில் நான் நன்றி பாராட்டுகின்றேன்.
.