இங்கிலாந்து மகளிர் அணியின் வீராங்கனைகளுக்கு திருமணம்

0
349

2017 ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் வீராங்கனைகளான கெத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கேப்டன் ஹீதர் நைட், டேனி வியாட், இசா குஹா, ஜென்னிகன் உள்ளிட்ட இங்கிலாந்து அணியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் இவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

‘திருமணம் செய்து கொண்ட கெத்ரின் ப்ரண்ட் மற்றும் நாட் ஸ்கிவர் ஆகியோருக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இவ்விருவரும், 2017 ஆம் ஆண்டு மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் உறுப்பினர்கள். இருவரும் 2022 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையிலும் இடம்பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here