இங்கிலாந்து சிறையிலிருந்து விடுதலையானார் Wikleas அசாஞ்சே

0
125

இங்கிலாந்து சிறையில் இருந்த அசாஞ்சே, அமெரிக்காவின் நீதித்துறையின் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஒப்பந்தப்படி, அமெரிக்க இராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை அசாஞ்சே ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்த குற்றத்திற்கு 62 மாதங்கள் (1,860 நாட்கள்) சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால், அசாஞ்சே ஏற்கனவே 1,901 நாட்கள் இங்கிலாந்து சிறையில் இருந்துள்ளார்.

இதனால், இராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் அதற்கான தண்டனையை ஏற்கனவே இங்கிலாந்து சிறையில் அனுபவித்ததால் விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்க நீதித்துறையிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நீதித்துறை சம்மதம் தெரிவித்ததையடுத்து இங்கிலாந்து சிறையில் இருந்து அசாஞ்சே இன்று விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, இங்கிலாந்தில் இருந்து அசாஞ்சே விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவர் நாளை அமெரிக்காவின் மெரினா தீவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

அமெரிக்க இராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளார். பின்னர், ஏற்கனவே இங்கிலாந்தில் சிறை தண்டனை அனுபவித்ததையடுத்து ஒப்பந்தப்படி அவரை அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கில் இருந்து விடுதலை செய்ய உள்ளது. இதனை தொடர்ந்து ஜூலியன் அசாஞ்சே தனது சொந்த நாடான அவுஸ்திரேலியா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here