மலையக மக்களுக்கான இந்தியாவின் 10000ம் வீட்டுத்திட்டம் சஜித்பிரேமதாச தலைமையில் நடைமுறை படுத்தப்படுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
17.08.2024.சனிக்கிழமை தலவாக்கலையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் இந்த மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் தொழிலாளர் தேசிய சங்கத்தின்அமைப்பாளர் நாகராஜ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர் .
இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் கடந்த ஜந்து வருடங்கலாக நாங்கள் எதிர்கட்சியில் அங்கம் வகித்து வருகிறோம் மலையகத்தில் உள்ள ஆளும் கட்சியினை சார்ந்த அமைச்சர்கள் மாடிவீட்டுத்திட்டம் மற்றும் பத்துபேர்ச் கானி என்பவற்றை பெற்றுதருவதாக கூறினார்கள் மலையகத்திற்கான பல்கலைகழகம் அமைப்பதாக கூறினார்கள் ஆனால் இருதியில் எந்த அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை ஆனால் எமது நல்லாட்சி அரசாங்கத்தில் தனிவீட்டு திட்டம் முதல் கானி உரிமை பிரதேசசபை அதிகரிப்பு பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தோம்
இந்த அரசாங்கத்தில் மலையக மக்களை ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் ஏமாற்றியுள்ளனர் எமது மக்களை ஏமாற்றிவிட்டு மக்கள் மத்தியில் சென்று இன்று வீரவசணம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் அனைவரும் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபாய் பெற்றுக்கொடுத்துள்ளதாக பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள் பெருந்தோட்ட நிருவனங்களோடு 1350ரூபாய் சம்பதளதிற்கு மாத்திரமே பெருந்தோட்ட நிறுவனங்கள் உடன்பட்டுள்ளது அடுத்து மாதம் 10ம் திகதி மக்களுக்கு தெரியவரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக உண்மை வெளிவரும்
இன்று ஜனாதிபதி கூறுகிறார் லயன்களை கிராமங்கலாக மாற்றுவதாக கூறுகிறார் எமது வரலாறு 200வருடங்கள் ஆகையால் நாங்கள் கோறுவது தனிவீட்டு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்கலாக உள்வாங்கப்படுவதே எமது திட்டமாக அமைந்துள்ளது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித்பிரேமதாச நிச்சயம் வெற்றி பெருவார் சஜித்பிரேமதாச வெற்றி பெற்றவுடன் நான் அமைச்சாராக மக்கள் மத்தியில் வந்து விட்டு சென்ற அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுப்பேன் என குறிப்பிட்டார்
எஸ் .சதீஸ்