இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் (15) ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு பயணமாகவுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்துள்ளார்.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படுமெனவும் குறிப்பிட்டார்.
இவ்விஜயத்தின்போது, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்கலாமென, எதிர்பார்க்கப்படுகிறது.