இந்திய சுற்றுலாப்பணிகளை கவர விஷேட திட்டம்- பிரதமர்

0
305

இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் திட்டத்தைத் தயாரிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2022 ஆம ஆண்டில் இலங்கை, சுமார் 800,000 சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன் வருமானம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுற்றுலாத்துறையின் பங்குதாரர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டளவில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டக்கூடிய மற்றும் சுமார் 1.5 மில்லியன் உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்குமாறு அனைத்து பங்குதாரர்களையும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

உலகெங்கிலும் உள்ள அதிகமான எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் காலி இலக்கிய விழாவை மேம்படுத்துவதற்கான பணிகளை செயற்படுத்துமாறு பிரதமர் அரச சுற்றுலா அதிகாரிகளை வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here