உள்ளக மற்றும் வெளி இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் விரும்பினால் முகக்கவசம் அணியலாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு முகக்கவசம் அணியும் முறைமையை பயன்படுத்த வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
சுவாசக் கோளாறுகள் மற்றும் அது தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி சாதாரண முகக்கவசங்களை அணியலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.