கிராம உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் (திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்) கடமைகளில் இருந்து விலகி இருப்பார்களென கிராம உத்தியோ கத்தர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் நாளை முதல் ஒரு வார தொழிற்சங்க போராட்டத்தை கிராம சேவகர்கள் முன்னெடுப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தமது தொழில்சார் நடவடிக்கையால் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வு களை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பணிப்புரை விடுத்திருந்தார்.
ஆனாலும் கிராம சேவகர்களின் சம்பள முரண்பாடு, பதவியுயர்வு, சேவை யாப்பு தொடர்பான பிரச்சினைகள் தற்போது தொடர்ந்தே வண்ணமே இருப்பதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.