நாட்டில் மீண்டும் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதால் இன்று 30ஆம் திகதி, நாளை 31ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களையும் விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

கடந்த 04 வாரங்களாக நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதையடுத்து இந்த டெங்கு ஒழிப்பு தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தினமும் 200 க்கும் 300க்கும் இடைப்பட்ட டெங்கு நோயாளர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக வருகை தருவதாகவும் டிசம்பர் 26ஆம் திகதி வரை நாடு முழுவதும் 75,434 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட் டுள்ளதாகவும் அனைவரும் தமது வீடுகள் சுற்றாடலில் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து துப்புரவேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.