சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளது.
இக்குழு இன்று முதல் 30ஆம் திகதி வரை இலங்கையிலிருந்து, ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே 9 ஆம் திகதி முதல் மே 24 ஆம் திகதி வரையிலான முந்தைய மெய்நிகர் கலந்துரையாடலின் போது ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கும் ஏற்பாட்டின் மூலம் ஆதரிக்கப்படக்கூடிய பொருளாதார வேலைத்திட்டம் பற்றிய விவாதங்களைத் தொடரும் என்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழு தெரிவித்துள்ளது.