பிலிப்பைன்ஸில் இன்று காலை பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. 7.1 ரிக்டர் அளவுடையதாக இப்பூகம்பம் பதிவாகியதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு நிறுவகம் (USGS) தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் மிகப் பெரிய தீவான லூஸானில், அப்ரா எனும் மாகாணத்தில் காலை 8.45 மணிக்கு இப்பூகம்பம் ஏற்பட்டது.
பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தூரத்திலுள்ள தலைநகர் மணிலாவிலும் வானளாவிய கட்டடங்கள் குலுங்கின.
அப்ரா தீவின் டோலர்; நகரிலிருந்து 13 கிலோமீற்றர் தூரத்தில் 10 கிலோமீற்றர ஆழத்தில் இப்பூகம்பம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க பூகோளவியல் ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.