2022ஆம் ஆண்டிற்கான சூப்பர் மூன் என்றழைக்கப்படும் பெருநிலவு, இன்று காட்சியளிக்க உள்ளது.
வருடமொன்றில் மூன்று அல்லது நான்கு முறை தோற்றமளிக்கும் சூப்பர் மூன் இந்திய மற்றும் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 12 மணியளவில் காட்சியளிக்க உள்ளது.
பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் நிலவு ஒரு புள்ளியில் பூமிக்கு மிக அருகிலும், மற்றொரு புள்ளியில் தொலைவிலும் சென்று வரும். நீள்வட்டப்பாதையின் தொலைதூர புள்ளி அப்போஜீ என்றும், அருகில் உள்ள புள்ளி பெரிஜீ என்றும் அழைக்கப்படுகிறது.
முழு நிலவானது பெரிஜீ புள்ளியில் தோன்றும் போது வழக்கத்தை விட 17 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும். இந்த நிகழ்வை, சூப்பர்மூன் அதாவது பெருநிலவு என்றழைக்கிறோம்.