தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான வழிகாட்டல் வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துவதற்கு இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குதல் அல்லது அதனை ஒத்த வினாக்களை வழங்குவதாகத் துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் அல்லது அவற்றை வைத்திருத்தல் என்பனவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவரேனும் ஒருவர், நிறுவனம் அல்லது தரப்பினர் இந்த அறிவுறுத்தலை மீறுவார்களாயின் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தில் முறைபாடு செய்ய முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.