இன்று பதரநாட்டிய அரங்கேற்றம்

0
360

திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் மாணவியும்,நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சனின் மாணவியுமான செல்வி எறின் கிளன்சியா கிளன்சியஸ் லொயலாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்  இன்று 20 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப.2.30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவர் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடனக் கலையை பயின்று அரங்கேற்றத்தை மேற்கொள்கின்ற ஏழாவது மாணவியாவார். திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது .

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக லண்டன்,சலங்கை நர்த்தனாலயா நுண்கலைக் கல்லூரியின் இயக்குநர் கலாநிதி ஜெயந்தி யோகராஜாவும்,சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை நடனத்துறை விரிவுரையாளர் திருமதி சாந்தினி சிவநேசன்,யாழ் கல்வி வலய நடனபாட ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி பத்மினி செல்வேந்திரகுமார் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக சுண்டிக்குளி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி துஷ்யந்தி துஷிதரன்,ஏஞ்சல் சர்வதேச பாடசாலை பிரதி அதிபர் திருமதி அக்னஸ் செல்வராணி சத்தியசீலன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அணிசெய் கலைஞர்களாக ஸ்ரீமதி சுதர்சினி கரன்சன் நட்டுவாங்கம், நடன அமைப்பினையும், யாழ்.பல்கலைக்கழக சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தின் இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் இசைமாணி தவநாதன் றொபேட் குரலிசையையும்,மிருதங்க ஞான வாரிதி சி.துரைராஜா மிருதங்க இசையையும், சுருதி வேந்தன் அ.ஜெயராமன் வயலின் இசையையும் வழங்கி அரங்கேற்றத்திற்கு அணிசெய்யவுள்ளனர்.
திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர் நீ.மரிய சேவியர் அடிகளாருக்கு இந்த அரங்கேற்றம் சமர்ப்பணம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here