இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையை இன்று முதல் 5 ரூபாவினால் குறைக்குமாறு சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரிசி சந்தைப்படுத்தல் சபையினால் விநியோகிக்கப்படும் அனைத்து அரிசிகளின் விலைகளும் இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதன்படி, ஒரு கிலோ சம்பா 225 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா 245 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 205 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு நாடு ஒரு கிலோ 215 ரூபாவுக்கும் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.