கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் நடமாடும் விற்பனை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல், வானவிலங்கு, வனவள, நீர் வழங்கள், பெருந்தோட்ட மற்றும் உடகட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் தேங்காய் விலை அதிகரிப்பினால் நுகர்வோர் சந்தித்துள்ள நெருக்கடிக்கு தீர்வாக, இந்த வேலைத்திட்டம் இன்றிலிருந்து (23) ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இந்த வேலைத்திட்டத்தினூடாக 100 – 120 வரையில் தேங்காய் கொள்வனவு செய்ய முடியும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு எல்லைக்கு உட்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதி, கிருளபனை பொதுச் சந்தை, மற்றும் நிதி அமைச்சை அண்மித்த பகுதிகளை அண்மித்த பகுதிகளில் நடமாடும் லொறியினூடாக தேங்காய் விநியோகிக்கப்படும்.
அதேபோன்று, ஸ்ரீ ஜயவர்தனபுறக்கோட்டை நகர சபை எல்லைக்கு உட்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதி மற்றும் நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்த அரங்குக்கு அண்மையில் தேங்காய் விநியோகிக்கப்படும்.
கடுவலை மற்றம் பத்தரமுல்லையை உள்ளடக்கும் வகையில் செத்சிறிபாய அரச அலுவலக பகுதியை அண்மித்த இடங்கள், டென்சில் கொப்பேகடுவ தேங்காய் பயிர்செய்கை சபையை அண்மித்த பகுதிகளில் தேங்காய் கொள்வனவு செய்ய முடியும்.
தேங்காய் பயிர்செய்கை சபையினால் நாளாந்தம் 10,000 தேங்காய்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதுடன் திங்கட் கிழமை, புதன் கிழமை, மற்றும் வெள்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் 5000 தேங்காய்கள் என்ற அடிப்படையில் 15,000 தேங்காய்கள் விநியோகிக்கப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.