2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று(19) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
SMS மற்றும் மின்னஞ்சலூடாக மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் www.ugc.ac.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்திற்குள் பிரவேசித்து மாணவர்கள் தங்களை பதிவு செய்துகொள்ள முடியும். அதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி வரை பல்கலைக்கழகங்களுக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.