எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்புமென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தேவையான அளவு டீசல் மற்றும் பெற்றோல் இன்று முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 5,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3,500 மெற்றிக் தொன் பெற்றோல் என்பன விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.