இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 28.07.2022

0
341

மேஷம் : அசுவினி: முன்னோர் வழிபாடு நலன் தரும். அரசு வழியிலான முயற்சி நிறைவேறும்.
பரணி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
ரோகிணி: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். விஐபிகள் உங்களுக்கு ஆதரவு புரிவார்கள்.
மிருகசீரிடம் 1, 2: வியாபாரத்தில் தடைகள் விலகும். கொடுக்கல் வாங்கல் சீராகும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் குழப்பம் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்.
திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பொருளாதார நிலை உயரும்.
புனர்பூசம் 1, 2, 3: புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிடுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம் : புனர்பூசம் 4: எதிலும் அவசரம், ஆவேசம் வேண்டாம். அமைதியாக செயல்படுங்கள்.
பூசம்: செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திப்பீர்கள்.
ஆயில்யம்: அலைச்சல் குழப்பம் என தடுமாற்றம் உண்டாகும். முயற்சியில் கவனம் தேவை.

சிம்மம் : மகம்: திடீர் செலவால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். முயற்சி இழுபறியாகும்.
பூரம்: பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். கோபத்தை தவிர்ப்பது நல்லது.
உத்திரம் 1: குடும்பத்தில் பிரச்னை தோன்றும். பொருளாதார நெருக்கடி ஏற்படலாம்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
அஸ்தம்: நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார நிலை உயரும்.
சித்திரை 1, 2: குடும்பத்தேவை நிறைவேறும். வியாபார வளர்ச்சிக்காக பாடுபடுவீர்கள்

துலாம் : சித்திரை 3, 4: சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சுவாதி: தொழிலை விருத்தி செய்வீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு ஏற்படும்.
விசாகம் 1, 2, 3: செல்வாக்கு உயரும். முன்னோர் வழிபாடு மகிழ்ச்சியை வழங்கும்.

விருச்சிகம் : விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். விஐபிகளின் ஆதரவால் நன்மை ஏற்படும்.
கேட்டை: பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.

தனுசு : மூலம்: முன்னோர் வழிபாடு நன்மை தரும். சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை.
பூராடம்: எதிர்பார்ப்பு இழுபறியாகும். விரோதிகளால் சில சங்கடங்கள் உண்டாகும்.
உத்திராடம் 1: முயற்சிகளில் தடைகள் ஏற்படும். அலைச்சல், செலவு அதிகரிக்கும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம்: நண்பர்களால் நன்மை அதிகரிக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: எதிர்பார்த்த செய்தி வரும். நல்லவர்களின் ஆதரவால் எண்ணம் பூர்த்தியாகும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: எதிர்ப்பு விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு எண்ணியதை அடைவீர்கள்.
சதயம்: முன்னோர் வழிபாட்டில் மனம் மகிழ்வீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பாராத வரவு வந்து சேரும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

மீனம் : பூரட்டாதி 4: குடும்ப நன்மைக்காக எதிர்கால திட்டம் ஒன்றை மேற்கொள்வீர்கள்
உத்திரட்டாதி: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். சேமிப்பில் கவனம் செல்லும்.
ரேவதி: உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். சொத்து பிரச்னை சுமூகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here