இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 05.07.2022

0
361

மேஷம் : அசுவினி: பிரமுகர்களின் ஆதரவுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள்.
பரணி: உங்கள் செயல்பாட்டின் காரணமாக பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள்.
கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: அலுவலகத்தில் நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஏற்படும்.
ரோகிணி: பிரபலங்களை சந்தித்து உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: உங்கள் வசதிக்கேற்ப வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
திருவாதிரை: நண்பர்கள் ஆதரவாக இருப்பர். நினைத்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: உங்களுடைய ஆற்றல் வெளிப்படும் நாள். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூசம்: வாக்கு வன்மையால் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம்: குழப்பங்கள் விலகும். பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவீர்கள்

சிம்மம்: மகம்: உங்களது செயல்கள் மதியம் வரை இழுபறியாக இருந்தாலும் அதன்பின் நடந்தேறும்.
பூரம்: திருப்பு முனையான நாள். உங்கள் எண்ணத்தில் ஒன்று நிறைவேறும்.
உத்திரம் 1: பெரியவர்களின் வழிகாட்டுதல் பயன் தரும். முயற்சியில் நன்மை காண்பீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: வீண் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மதியத்திற்கு மேல் நிதிநிலை சீராகும்.
அஸ்தம்: நண்பர்களின் ஒத்துழைப்போடு ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள்.
சித்திரை 1, 2: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். செலவுகள் கட்டுப்படும்.

துலாம் : சித்திரை 3, 4: எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். இருந்தாலும் பொறுமை தேவை.
சுவாதி: மதியத்திற்கு மேல் எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். நிதானமாக செயல்படவும்.
விசாகம் 1, 2, 3: மதியம் வரை மகிழ்ச்சியாகவே சென்றாலும் அதன்பின் செயல்களில் சிரமம் ஏற்படும்.

விருச்சிகம் : விசாகம் 4: சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.
அனுஷம்: புதிய வேலை வாய்ப்பு உங்களைத் தேடி வரும். முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.
கேட்டை: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பாராத வரவு உங்களை மகிழ்விக்கும்.

தனுசு: மூலம்: எதிர்காலம் கருதி நீங்கள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறும்.
பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.
உத்திராடம் 1: வேலைப்பளு அதிகாரித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி மதியத்திற்கு மேல் விலகும்.
திருவோணம்: நிறைவேறாமல் இருந்த முயற்சிகள் மதியத்திற்கு மேல் நிறைவேறும். பணவரவு உண்டு.
அவிட்டம் 1, 2: மனதில் உண்டான சங்கடம் விலகும். மதியத்திற்கு மேல் ஆதாயம் காண்பீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4: மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதற்குமுன் பணிகளை முடியுங்கள்.
சதயம்: காலையில் இருக்கும் உற்சாகம் மதியத்திற்கு மேல் இல்லாமல் போகும். செயலில் சிக்கல் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3: மதியத்திற்கு மேல் சிறு சிறு சங்கடங்களை சந்திப்பீர்கள். கவனம் தேவை.

மீனம் : பூரட்டாதி 4: எண்ணியதை அடைந்து மகிழ்வீர்கள். நட்புகள் வழியே நன்மைகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: உங்களது சிறப்பை மற்றவர்கள் உணர்வார்கள். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வருவர்.
ரேவதி: சோதனைகளை சாதனைகளாக்கி மகிழ்வீர்கள். உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here