இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 18.07.2022

0
284

மேஷம் : அசுவினி : முயற்சி வெற்றியாகும் நாள். வர வேண்டிய பணம் இன்று வந்து சேரும்.
பரணி : பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் காண்பீர்கள். எண்ணம் நிறைவேறும் நாள்.
கார்த்திகை 1 : பொருளாதார நிலை சீராகும். நண்பர்களின் உதவியால் நன்மை அதிகரிக்கும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ரோகிணி: உயரதிகாரிகளின் ஆதரவுடன் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2 : உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். கூட்டுத்தொழில் பற்றி சிந்திப்பீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.
திருவாதிரை : பழைய பிரச்னைகளில் ஒன்றை முடிப்பீர்கள். நன்மையான நாள்.
புனர்பூசம் 1, 2, 3 : வியாபாரத்தில் புதிய நட்பு உண்டாகும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் தோன்றும்.

கடகம் : புனர்பூசம் 4 : இன்று முடியும் தருவாயில் இருந்த வேலை இழுபறியாகும்.அமைதி தேவை.
பூசம் : சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சி வேண்டாம். பணிபுரியும் இடத்தில் நிதானம் அவசியம்.
ஆயில்யம் : மறைமுக எதிர்ப்புகளால் நெருக்கடி அதிகரிக்கும். விழிப்புணர்வு தேவை.

சிம்மம் : மகம் : நண்பர்களின் ஆதரவுடன் உங்கள் செயல் சாதகமாகும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
பூரம் : வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
உத்திரம் 1 : உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு ஏற்படும். அதிகாரிகள் பாராட்டுவார்கள்.

கன்னி : உத்திரம் 2, 3, 4 : ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
அஸ்தம் : உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவுடன் செயல்படுவார்கள். வருமானம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2 : பகைவர்களின் திட்டங்களை முறியடித்து முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

துலாம் : சித்திரை 3, 4 : நேற்றைய முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
சுவாதி: செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். பணியிடத்தில் பொறுப்பு கூடும்.
விசாகம் 1, 2, 3: சொத்துப் பிரச்னை ஒன்று உறவினர் ஒருவரால் சாதகமாகும்.

 விருச்சிகம் : விசாகம் 4 : உழைப்பிற்கேற்ற ஆதாயம் காண்பீர்கள். தொழில் நிலையில் திருப்தி ஏற்படும்.
அனுஷம் : உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். வார்த்தைகளில் நிதானம் தேவை.
கேட்டை : வேலை தேடியவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு ஏற்படும்.

தனுசு : மூலம் : குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நிதிநிலை சீராகும்.
பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் அதிகரிக்கும்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த பணம் வரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள்.
திருவோணம் : தடைபட்டிருந்த வருமானம் மீண்டும் வரும். செயல்கள் எளிதாக நிறைவேறும்.
அவிட்டம் 1, 2 : குடும்பத்தினர் விருப்பப்படி புதிய பொன் பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : முயற்சிக்கேற்ற பலன் இல்லை என்ற எண்ணம் மேலோங்கும்.
சதயம் : வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். நெருக்கடி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 : விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடையும் நாள். செயல்களில் கவனம் தேவை.

மீனம் : பூரட்டாதி 4 : எதிர்பாராத செலவுகளால் சங்கடத்தை சந்திப்பீர்கள். புதிய முயற்சிகள் வேண்டாம்.
உத்திரட்டாதி : அரசு வழியில் நெருக்கடி உண்டாகும். யாருடனும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
ரேவதி : அலைச்சலுடன் செலவும் அதிகரிக்கும். செயல்கள் இழுபறியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here