இன்றைய பலன் உங்களுக்கு எப்படி? 06.08.2022

0
211

மேஷம்: அசுவினி: உங்களது முயற்சியில் தடை ஏற்படக்கூடும். கவனமாக செயல்படுங்கள்.
பரணி: பணியில் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் சங்கடத்தை அடைவீர்கள்.
கார்த்திகை 1: முயற்சிகள் இழுபறியாகும். எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும்.

ரிஷபம்: கார்த்திகை 2இ 3இ 4: குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
ரோகிணி: பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் முயற்சி நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2: தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கும். லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உயர்ந்தோரின் ஆதரவால் உங்களுடைய செல்வாக்கு உயரும்.
திருவாதிரை: விரைந்து செயல்பட்டு ஒரு செயலை முடிப்பீர்கள். தடைபட்டிருந்த வருவாய் வரும்.
புனர்பூசம் 1, 2, 3: பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும்.

கடகம்: புனர்பூசம் 4: எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும்.
பூசம்: நீங்கள் எதிர்பார்த்த ஒன்று ஆதாயமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.
ஆயில்யம்: புதிய ஒப்பந்தத்தில் கையொப்பம் போடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்: மகம்: தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் தோன்றும். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
பூரம்: சகபணியாளர்கள் மறைமுகமாக தொல்லை அளிப்பார்கள். எச்சரிக்கை அவசியம்.
உத்திரம் 1: கடன்களால் சங்கடமடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் முயற்சி தேவைப்படும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: முயற்சி எளிதாக நிறைவேறும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும்.
அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: விருந்து விசேஷம் என்று சென்று வருவீர்கள். உங்களது முயற்சி பலிதமாகும்.

துலாம் : சித்திரை 3, 4: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: புதிய வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3: உறவினரின் சுய ரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: திட்டமிடுதலில் குழப்பம் உண்டாகும். உங்கள் நினைப்பிற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும்.
அனுஷம்: பொறுப்புகள் கூடும். சகபணியாளர்களுடன் பிரச்னைகள் உண்டாகும்.
கேட்டை: அவசர வேலைக்காக அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்ப்பீர்கள்.

தனுசு: மூலம்: செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கவனத்துடன் செயல்படுங்கள்.
பூராடம்: பிறரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்களுடைய முயற்சிகள் வெற்றியாகும்.
உத்திராடம் 1: எதிர்பாராத பயணம்இ அலைச்சல் உண்டாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: புதிய நட்பின் வழியே உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவோணம்: எதிர்பாராத வருவாய் வரும். உங்களுடைய செயல்கள் வெற்றியாகும்.
அவிட்டம் 1,2: வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
சதயம்: பணியாளர்கள் சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி 1, 2, 3: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். உங்களுடைய முயற்சி லாபத்தை உண்டாக்கும்.

மீனம் : பூரட்டாதி 4: பிரச்னைகளை தீர்ப்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் இருந்த பிரச்னை தீரும். புதிய நட்பினால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
ரேவதி: முயற்சியில் வெல்வீர்கள். உங்களுடைய செல்வாக்கு உயரும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here