இன்றைய பலன் உங்களுக்கு எப்படி? 20.06.2022

0
407

மேஷம் : அசுவினி : பண வரவில் இருந்த தடை விலகும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பரணி : பெரியவர்களின் ஆதரவுடன் செயலில் முன்னேற்றம் காண்பீர்கள். பணம் வீடு தேடி வரும்.
கார்த்திகை 1 : அறிமுகம் இல்லாதவர்களை நம்ப வேண்டாம். விழிப்புணர்வு தேவை.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : நேற்றைய செயல் பலன் தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
ரோகிணி : எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். ஒரு சிலருக்கு இட மாற்றம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1, 2 : சங்கடங்களை சரி செய்து தொழில் வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : உங்கள் திறமை வெளிப்படும். புதிய முயற்சி நன்மை அளிக்கும்.
திருவாதிரை : நினைத்ததை செய்து முடிப்பீர்கள். நல்ல எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

கடகம் : புனர்பூசம் 4 : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எதிரிகளால் தொல்லை ஏற்படும்.
பூசம் : நினைத்த செயலை நிறைவேற்ற முடியாமல் போகும். குழப்பம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மற்றவர்களிடம் வீண் விவாதம் வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படலாம்.

சிம்மம்: மகம் : உங்கள் முயற்சி நிறைவேறும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.
பூரம் : உறவினர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
உத்திரம் 1 : நண்பர்களின் ஒத்துழைப்பால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : உங்களுடைய செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் அகலும்.
அஸ்தம் : குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நன்மை அதிகரிக்கும்.
சித்திரை 1, 2 : தடைகள் அகற்றி தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். லாபகரமான நாள்.

துலாம் : சித்திரை 3, 4 : பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அக்கறை காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
சுவாதி : புதிய வாகனம் வாங்கும் முயற்சி இன்று நிறைவேறும்.பயணங்களால் நன்மை உண்டு.
விசாகம் 1, 2, 3 : சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம் : விசாகம் 4 : தாய்வழி உறவினர்களின் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.
அனுஷம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் தொழிலில் இருந்து வந்த தொய்வு விலகும்.
கேட்டை : எதிர்பாராத இடத்திலிருந்து வர வேண்டிய பணம் வரும்.பணிபுரியும் இடத்தில் சாதகமான நிலை ஏற்படும் உண்டாகும்.

தனுசு : மூலம் : கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சரியாகும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
பூராடம் : நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திராடம் 1 : வியாபாரத்தில் புதிய முயற்சியைக் கையாளுவீர்கள். நல்ல எண்ணம் நிறைவேறும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : தொழிலில் இருந்து வந்த போட்டி விலகும். வருமானம் அதிகரிக்கும்.
திருவோணம் : குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
அவிட்டம் 1, 2 : புதிய வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : புதிய பாதையில் பயணிப்பீர்கள். தொல்லை கொடுத்து வந்தவர் விலகுவர்.
சதயம் : பிரச்னைகளை சரி செய்வீர்கள். உங்கள் விருப்பப்படி பொதுக்காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : பணியிடத்தில் இருப்பவருக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ஆதாயம் காண்பீர்கள்.

மீனம் : பூரட்டாதி 4 : மனதில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி : நேற்றைய அடிப்படை தேவை இன்று நிறைவேறும். குடும்பத்திற்காக சுபசெலவு அதிகரிக்கும்.
ரேவதி : வியாபாரத்தில் உங்கள் திட்டங்களை மாற்றி அமைப்பீர்கள். முயற்சி இன்று பலிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here