இன்றைய பலன் உங்களுக்கு எப்படி? 24.08.2022

0
298

மேஷம்: அசுவினி: இன்று காலை வரை உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். அதன்பின் உழைப்பு அதிகரிக்கும்.
பரணி: நீங்கள் நினைத்த செயலைக் காலையில் முடித்துக் கொள்ளுங்கள். அதன்பின் இழுபறி உண்டாகும்.
கார்த்திகை 1: உங்கள் மனம் வீண் சிந்தனைகளில் மூழ்கும். முயற்சியில் நெருக்கடியை சந்திப்பீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: தடைகளை சந்தித்தாலும் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்தவற்றில் வெற்றி காண்பீர்கள்.
ரோகிணி: இரண்டு நாட்களாக இருந்த சிரமங்கள் இன்று விலகும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: சுறுசுறுப்பாக செயல்பட்டு எண்ணியதை அடைவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: காலையில் இருந்த உற்சாகம் மதியம் மறையும். சிந்தித்து செயல்பட்டால் இழப்பை தவிர்க்கலாம்.
திருவாதிரை: தொழிலில் எதிர்பார்த்ததை லாபம் குறையும். இன்று புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3: குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். உங்களை வருத்தமடைய வைக்கும் சம்பவம் நடக்கலாம்.

கடகம்: புனர்பூசம் 1, 2, 3: முயற்சிகள் வெற்றியாகும். நீண்ட நாட்களாக நீங்கள் முயற்சித்தது இன்று நிறைவேறும்.
பூசம்: உங்கள் திறமை வெளிப்படும். உங்கள் பேச்சாற்றலால் வழக்கு வெற்றியாகும். விஐபிகளின் ஆதரவு உண்டு.
ஆயில்யம் அலட்சியம் செய்தவர்கள் இன்று உங்களைத் தேடி வருவர். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.

சிம்மம்: மகம்: செலவு அதிகரிக்கும். இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்வீர்கள். பண விஷயத்தில் கவனம் தேவை.
பூரம்: குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும். மனை, வாகனம் வாங்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவார்கள்.
உத்திரம் 1: நீண்ட நாள் எண்ணம் பூர்த்தியாகும். செலவுகள் செய்து நீங்கள் விரும்பியதை அடைவீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். நிதிநிலை உயரும்.
அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவர்.
சித்திரை 1, 2: மறுமண வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பாராத வருமானத்தினால் உங்கள் சங்கடங்கள் விலகும்.

துலாம்: சித்திரை 3, 4: குழப்பம் தீரும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். சுயதொழில் புரியும் எண்ணம் சிலருக்கு ஏற்படும்
சுவாதி: மறைமுக எதிரிகள் விலகிச் செல்வார்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
விசாகம் 1, 2, 3: செயலில் தெளிவு இருக்கும். திட்டமிட்டு ஈடுபடும் செயல்களில் வெற்றி காண்பீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த சங்கடம் விலகும். உங்கள் செயல்கள் இன்று வெற்றியாகும்.
அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். சுபநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். யோகமான நாள்.
கேட்டை: தொல்லை விலகி நன்மை காண்பீர்கள். முயற்சியில் இருந்த தடை விலகும். முன்னேற்றமான நாள்.

தனுசு : மூலம்: செயல்களில் குழப்பம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த ஒன்றில் இழுபறி உண்டாகும்.
பூராடம்: பழைய பிரச்னை ஒன்று இன்று மீண்டும் தலையெடுத்து உங்களை சங்கடத்திற்கு ஆளாக்கும்.
உத்திராடம் 1: பயணத்தில் சங்கடம் உண்டாகும் முயற்சிகளிலும் இன்று பின்னடைவை சந்திக்க நேரிடும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
திருவோணம்: இனிய சம்பவம் நடந்தேறும். எதிர்பார்த்திருந்த ஒன்றை இன்று அடைவீர்கள். நன்மையான நாள்.
அவிட்டம் 1, 2: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பநலனில் கவனம் செல்லும். வருமானம் கூடும்.

கும்பம் : அவிட்டம் 3, 4: தடைகள் விலகும். முயற்சியில் ஒன்று வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
சதயம்: நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.
பூரட்டாதி 1, 2, 3: இழுபறியாக இருந்த முயற்சி இன்று வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மீனம் : பூரட்டாதி 4: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி இருந்தாலும் எதிர்பார்ப்பு நிறைவேறும். பண வரவு உண்டு.
உத்திரட்டாதி: பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். சிலர் மாற்றுப் பணிக்கு செல்ல வேண்டியதாக இருக்கும்.
ரேவதி: உங்கள் முயற்சிகளில் இழுபறி உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த விஷயத்தில் தாமதம் உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here