மேஷம் : அசுவினி: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கோயில் தரிசனம் மகிழ்ச்சி தரும்.
பரணி: உங்களின் விருப்பம் இன்று நிறைவேறும் என்றாலும் செலவுகள் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சந்தோஷம் அதிகரிக்கும்
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னை தீரும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
ரோகிணி: நண்பர்களின் துணையுடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: உங்களுடைய நீண்ட நாள் எண்ணம் இன்று நிறைவேறும்.
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்களிடம் புதிய உற்சாகம் தோன்றும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
திருவாதிரை: குடும்ப பிரச்னைகளை சரி செய்வீர்கள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நிதி நிலை உயரும்.
கடகம்: புனர்பூசம் 4: புதிய திட்டங்கள் தீட்டி செயல்பட ஆரம்பிப்பீர்கள். திருப்பு முனையான நாள்.
பூசம்: குடும்பத்தினரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.
ஆயில்யம்: உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவர். உங்களின் செல்வாக்கு உயரும்.
சிம்மம்: மகம்: வேகமாக செயல்பட்டு உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.
பூரம்: தொழிலில் இருந்த சிக்கல்களை சரி செய்வீர்கள். வருமானம் கூடும்.
உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரியோரின் ஆதரவு உண்டு.
கன்னி: உத்திரம் 2, 3, 4: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
அஸ்தம்: நிதிநிலை குறித்த எண்ணம் மேலோங்கும். புதிய முயற்சி ஒன்றில் இறங்குவீர்கள்.
சித்திரை 1, 2: அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். பிறரால் பாராட்டப்படுவீர்கள்.
துலாம்: சித்திரை 3, 4: உங்கள் அணுகுமுறையால் நீண்ட நாள் பிரச்னை இன்று முடிவுக்கு வரும்.
சுவாதி: மனதில் உற்சாகம் கூடும். விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள்.
விசாகம் 1, 2, 3: குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர்கள். வருவாயில் ஏற்பட்ட தடை விலகும்.
விருச்சிகம்: விசாகம் 4: குழந்தைகளின் நலனுக்காக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அலைச்சல் கூடும்.
அனுஷம்: குடும்ப செலவுகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.
கேட்டை: வழக்கமான செயல்களில் ஈடுபடுவீர்கள். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
தனுசு: மூலம்: எதிர்பார்த்த வருவாய் இன்று உங்களைத் தேடி வரும். ஆதாயமான நாள்.
பூராடம்: உங்கள் செயல்களில் விவேகம் இருக்கும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள்.
உத்திராடம் 1: குடும்பத்தினரிடம் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
மகரம்: உத்திராடம் 2, 3, 4: தொழிலை விருத்தி செய்வதற்காக புதிய முயற்சியில் இறங்குவீர்கள்.
திருவோணம்: முதலீடுகள் செய்திருந்தவற்றில் ஆதாயமான நிலை ஏற்படும். வருவாய் கூடும்.
அவிட்டம் 1, 2: நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.
கும்பம்: அவிட்டம் 3, 4: தந்தை வழி உறவுகளின் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சதயம்: உங்களுடைய எண்ணங்களில் ஒன்று நிறைவேறும். விரும்பியதை அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: கோயிலுக்கு சென்று வருவீர்கள். உங்கள் மனம் அமைதியை நாடும்.
மீனம்: பூரட்டாதி 4: வெளியூர் பயணங்களால் சங்கடங்கள் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும்
உத்திரட்டாதி: உங்களின் உடல் சோர்வடையும். மனம் அமைதியை நாடும்.
ரேவதி: உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் உங்கள் மீது கோபம் கொள்வார்கள்.
2022