மேஷம்: அசுவினி: முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
பரணி: நிதி நிலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். செயலில் ஆதாயம் காண்பீர்கள்.
கார்த்திகை 1: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அடைய முடியாமல் போகும்.
ரோகிணி: உங்கள் முயற்சியில் இன்று பின்னடைவுகள் ஏற்படும். எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும்.
மிருகசீரிடம் 1, 2: செயல்களில் கவனம் தேவை. மற்றவரால் சில சங்கடங்களை சந்திக்க நேரும்.
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் செயல்களில் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.
திருவாதிரை: நீங்கள் விரும்பும் வகையில் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
புனர்பூசம் 1, 2, 3: வருவாயில் இருந்த சங்கடங்களை சரி செய்வீர்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும்.
கடகம்: புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த ஒரு செயலில் இன்று உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.
பூசம்: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர்கள். பிறரால் மதிக்கப்படுவீர்கள்.
ஆயில்யம்: உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.
சிம்மம்: மகம்: பிள்ளைகளுக்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். முயற்சிகள் வெற்றியாகும்.
பூரம்: உங்களின் செல்வாக்கு வெளிப்படும் நாள். பிறரால் சாதிக்க முடியாத ஒன்றை நீங்கள் சாதிப்பீர்கள்.
உத்திரம் 1: பெற்றோரின் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
கன்னி: உத்திரம் 2, 3, 4: மனம் காட்டும் வழியில் செல்வீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அஸ்தம்: புதிய சொத்து வாங்குவதற்குரிய நிலை உருவாகும். விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள்.
சித்திரை 1, 2: நீண்ட நாள் விருப்பம் ஒன்று நிறைவேறும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்: சித்திரை 3, 4: உங்களின் எண்ணம் ஒன்று நிறைவேறும். நீங்கள் நினைத்ததை அடைந்து மகிழ்வீர்கள்.
சுவாதி: நெருக்கடிகள் இருந்தாலும் நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும்.
விருச்சிகம்: விசாகம் 4: சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள்.
அனுஷம்: வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
கேட்டை: புதிய வேலைக்காக நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
தனுசு: மூலம்: உங்கள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.
பூராடம்: செயலில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும்.
உத்திராடம் 1: நெருக்கடிகளால் சங்கடப்படுவீர்கள். பணியாளர்கள் மேலதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள்.
மகரம்: உத்திராடம் 2, 3, 4: எதிர்பாராத செலவுகளால் சங்கடப்படுவீர்கள். வரவை விட செலவு கூடும்.
திருவோணம்: உங்களின் செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள்.
அவிட்டம் 1, 2: உங்களின் நீண்ட நாள் விருப்பம் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்: அவிட்டம் 3, 4: உங்கள் முயற்சி எளிதில் வெற்றியாகும். நிதிநிலை உயரும்.
சதயம்: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும்.
பூரட்டாதி 1, 2, 3: நண்பர்களின் ஒத்துழைப்பால் உங்களின் முயற்சி வெற்றியாகும்.
மீனம்: பூரட்டாதி 4: அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் உண்டான நெருக்கடிகளை சரி செய்வீர்கள். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும்.
ரேவதி: எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். பணியாளர்கள் வெளியூர் பயணம் செல்வீர்கள்.