இன்றைய ராசி பலன் – 08,10,2022

0
381

மேஷம்: அசுவினி: மதியம் வரை உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். அதன் பின் செயல்களில் சங்கடம் உண்டாகும்.
பரணி: காலையில் நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
கார்த்திகை 1: மதியத்திற்குள் உங்கள் முயற்சி லாபமாகும். பொருளாதார நிலை சீராகும்

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2: உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் வருவார்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி சாதிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
திருவாதிரை: பழைய பிரச்னை ஒன்று தீரும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் புதிய தொடர்பு உண்டாகும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் தோன்றும்.

கடகம்: புனர்பூசம் 4: உங்கள் எதிர்பார்ப்பு மதியத்திற்கு மேல் நிறைவேறும். சங்கடங்கள் விலகும்.
பூசம்: மதியம் வரை புதிய முயற்சிகள் வேண்டாம். பணியிடத்தில் நிதானம் அவசியம்.
ஆயில்யம்: மறைமுக எதிர்ப்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள் என்றாலும் அதை சமாளிப்பீர்கள்.

சிம்மம்: மகம்: இன்று மதியம் வரை உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும் அதன்பின் செயல்களில் சங்கடம் உண்டாகும்.
பூரம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் மதியத்திற்கு மேல் திடீர் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். விழிப்புணர்வு அவசியம்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும்.
அஸ்தம்: பணியிடத்தில் உண்டான சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: மறைமுக எதிர்ப்புகளை கண்டு பிடித்து முறியடிப்பீர்கள். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
சுவாதி: செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். பணியிடத்தில் பொறுப்பு கூடும்.
விசாகம் 1, 2, 3: சொத்துப் பிரச்னை ஒன்றில் உறவினர்களின் உதவியுடன் வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: உழைப்பிற்கேற்ற ஆதாயம் காண்பீர்கள். தொழில் நிலையில் திருப்தி ஏற்படும்.
அனுஷம்: உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பேச்சில் நிதானம் தேவை.
கேட்டை: வேலைத்தேடி வந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தனுசு: மூலம்: குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நிதிநிலை சீராகும்.
பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் அதிகரிக்கும்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த பணம் வரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள்.
திருவோணம்: தடைபட்டிருந்த வருவாய் மீண்டும் வரத்தொடங்கும். செயல்கள் எளிதாக நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: குடும்பத்தினர் விருப்பப்படி பொன் பொருள் வாங்குவீர்கள். மகிழ்ச்சி கூடும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: முயற்சிக்கேற்ற பலன் இல்லை என்ற எண்ணம் மேலோங்கும். மதியத்திற்கு மேல் மனம் மகிழும்.
சதயம்: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். நெருக்கடி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3: விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடையும் நாள். செயல்களில் கவனம் தேவை.

மீனம்: பூரட்டாதி 4: மதியம் வரை புதிய முயற்சிகள் வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: மதியம் வரை நெருக்கடி நீடிக்கும். யாருடனும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
ரேவதி: மதியத்திற்கு மேல் உங்கள் மனம் மகிழும் படியான நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here