போக்குவரத்து அமைச்சினால் பழைய பஸ்களை பாவனைக்கு பயன்படுத்தும் நோக்கில் போக்குவரத்து அமைச்சினால் சனிக்கிழமை வழங்கப்பட்ட இயந்திரங்களை இறக்கி ஏற்றும் போது ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
புணருத்தாபன திட்டத்தில் பழுதடைந்த பஸ்களுக்கு புதிய இயந்திரங்களை பொருத்தி பஸ்களை இயங்க வைக்கும் திட்டத்தில் வாழைச்சேனை, களுவான்சிக்குடி, மட்டக்களப்பு, மூதூர் ஆகிய நான்கு போக்குவரத்து சாலைகளுக்கு புதிய இயந்திரங்கள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன, இராஜங்க அமைச்சர் சிவனநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த இயந்திரங்களை மீண்டு; வாழைச்சேனை போக்குவரத்து சாலையில் இருந்து உரிய இடங்களுக்கு ஏற்றும் போது இயந்திரங்களை தூக்கும் பாரதூக்கியின் சங்கிலி அருந்ததினால் இயந்திரம் விழுந்ததில் இரண்டு போர் காயமடைந்துள்ளனர்.
வாழைச்சேனை போக்குவரத்து சாலையின் ஊழியர்களான ஏ.பி.ஏ.சுபுஹான் (வயது – 54) ஈ.பிரபாகரன் (வயது 49) ஆகிய இருவருமே காயமடைந்தவர்களாகும்.
குறித்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.