இயேசு பாலகனின் பிறப்பானது உலகவாழ் அனைத்து கிறிஸ்த்தவ மக்களால் குதூகலமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில், இலங்கை மக்களாகிய நாமும் இதில் ஒன்றிணைந்து, அறியாமையினையும், அகந்தையினையும் அகற்றி மனித குலம் மேம்பாட்டடைய வாழ்த்துவதாக இ.தொ.கா பொதுச் செயலாரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இயேசுபிரான் உலக விடுதலைக்கு வித்திட்டவராவார். சமூக விடுதலைக்கு மாத்திரமல்லாது, சமய விடுதலைக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த இயேசுவின் கருணை நலிவுற்ற மக்களின் நல்வாழ்வுக்கு விடிவுபெற வேண்டுமென வேண்டுகின்றோம்.
இன்று எமது அடிப்படை வாழ்வியல் தேவைக்காக போராடி வரும் மலையக மக்களுக்கும் ஜீவாதார உரிமைகளை பெற்றுக் கொடுக்க வழிவகுக்க வேண்டுமெனவும், இலங்கையில் எப்பகுதியிலும் நமது மக்கள் வாழ்ந்தாலும் அவர்களின் இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள் யாவற்றுக்கும் இந்த நத்தார் தினம் ஒரு விடிவை ஏற்படுத்தும் என்பதில் நாம் திடமாக நம்புகின்றோம். இத்தருணத்தில் கருணை இயேசுவை மனதார பிரார்த்திப்போமாக.
சகலருக்கும் நலமும், வளமும், செழிப்பும். சிறப்பும் பெற்றுத்தர வேண்டுமென முழுமனதோடு வாழ்த்துகின்றேன். அனைவருக்கும் எனது இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.