இலங்கை தொடருக்கான 17வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் தேசிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான நடுவர்களில் ஒருவராக கடமையாற்ற முஹம்மட் ஹம்மாத் தெரிவு.
இலங்கை 17 வயதுகுட்பட்ட தேசிய அணிக்கும் பங்காளதேஷ் அணிக்குமிடையிலான 03 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் முடிவடைந்த நிலையில்
எதிர்வரும் டிசம்பர் 06, 07 , 08 ஆகிய தினங்களில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற இருக்கும் 03 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிக்கான நடுவர் பணிக்காக கிழக்கு மாகாணத்தில் இருந்து முதன் முறையாக நடுவர்
முஹம்மட் ஹம்மாத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைநகரில் பல போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றிய அனுபவமிக்கவராவார்.