அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் டிஜிட்டல் நூலகம் அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரத்தினபுரி ஓப்பநாயக்க வெலிகபொல பிரதேச சபை வளாகத்தில் சகல வசதிகளையும் கொண்டு அமைக்கப்பட்ட டிஜிட்டல் நூலகம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகம் கொழும்பு தேசிய நூலகம் உட்பட இலங்கையில் உள்ள அனைத்து நூலகங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் அந்த அனைத்து நூலகங்கள் தொடர்பாகவும் இணையவழியில் சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர் முதிதா சொய்சா, இலங்கை நூலக சேவை நிலையத்தின் தலைவர் கலாநிதி நந்தன தர்மரத்ன, இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனத்தின் பிரதான தொழிநுட்ப டிஜிட்டல் அதிகாரி காஞ்சன குடுகல, வெலிகபொல பிரதேச சபையின் தலைவர் பெலும் ஹேல்லபல்ல, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னால் உறுப்பினர் அநுர அலகியவன்ன, மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மஞ்சுலா இதிகாவெல மற்றும் முக்கிய அதிகார்கள் உட்பட பாசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
சிவா ஸ்ரீதரராவ்