சப்ரகமுவ மாகாண ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்தி அதிகார சபையினால் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி பாடசாலை அசிரியர்களுக்கான தெளிவு படுத்தும் நிகழ்வொன்று நேற்று(13) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 200 முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சிறார்களை பாதுகாப்பது, பாலர் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுஜானி விஜேசிங்க, சப்ரகமுவ மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மஞ்சுலா இதிகாவெல, சப்ரகமுவ மாகாண ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கோராலேகெதர, இரத்தினபுரி சுகாதார வைத்திய அதிகாரி எச்.பி.அமரகோன் உட்பட முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து னொண்டனர்.
இரத்தினபுரி நிருபர்