ஜனாதிபதி கோட்டாவின் பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார் சபாநாயகர்
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 38 (1) அ சரத்திற்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகல் 2022.07.14ஆம் திகதி முதல் செல்லுபடியாகும்.
இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.