இறுதிக் கிரியைகள் 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்

0
163

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் இறுதிக் கிரியைகள் நேற்று (20) இடம்பெற்றன.

தனது மரணத்தின் பின்னரான கிரியைகள் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உயில் எழுதி வைத்துள்ளார்.

அதில் இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

01. மரணத்தின் பின்னர் இறுதிக் கிரியைகள் கூடிய விரைவில் 24 மணித்தியாலத்துக்குள் நடத்துவது பொருத்தமானது. இறுதிச் சடங்கை சம்பிரதாய நிகழ்வாக ஆக்கிக்கொள்ள கூடாது. மதச்சடங்குகள் இருக்கக்கூடாது.

02. மூன்று பிள்ளைகளுக்கும் மரணத்தைப்பற்றி அறிவித்தால் பரவாயில்லை. அவர்கள் வெளிநாட்டிலோ அல்லது இலங்கையில் அவசரமாக வரமுடியாத இடத்திலோ இருந்தால் மரணச்சடங்குக்கு அவர்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.

03. இறுதிக்கிரியைகள் பற்றி உறவினர்கள் நண்பர்கள், ராவய ஊழியர்கள், வாசகர்கள், மற்றும் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டியதில்லை.

04. இறுதிக் கிரியைகள் நடந்து முடிந்த பின்னரே சிறு பத்திரிகை அறிவித்தலின் மூலமாகவே அனைவருக்கும் மரணச் செய்தியை அறிவிக்க வேண்டும்.

05. சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பிரசுரிக்க வேண்டிய மரண அறிவித்தலின் மாதிரியொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

06. இறுதிக் கிரியைகளின் பின்னரும் மரணத்தவர்களுக்காக செய்யப்படும் சம்பிரதாய நிகழ்வுகள் எதனையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

விக்டர் ஐவனின் வேண்டுகோளுக்கிணங்க அவரது இறுதிக் கிரியைகள் 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்டதுடன், அதன்படி நேற்று (20) காலியில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here