இலக்கிய இமயம் சரிந்தது

0
401

1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ம் திகதி கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு, புளியந்தீவு எனும் ஊரில் பிறந்தவர் கைலாயர் செல்லநய்னார் சிவகுமாரன்.

ஆரம்பக்கல்வியை ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை, சென்மேரிஸ் பயிற்சி பாடசாலை, புனித. மைக்கல் கல்லூரி, அரசாங்க கல்லூரி என மட்டக்களப்பு பிரதேசத்திலேயே பல பள்ளிகளில் கற்றவர், 1953 ஆம் ஆண்டு தமது குடும்பம் தலைநகர்- கொழும்பு நோக்கி குடிபெயர்ந்துடன், கொழும்பு இந்து கல்லூரியிலும், கொழும்பு சென். ஜோசப் கல்லூரியிலும் கற்றுள்ளார்.

தொடர்ந்து வெளிவாரி மாணவராக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், தமிழ்,மேலைத்தேய கலாசாரம் ஆகிய பாடங்களைக் கற்று கலைப் (BA) பட்டதாரியானார். இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றுக் கொண்டுள்ளார். 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தில் தகவல் உதவியாளராக பணி செய்தவாறே சுயாதீன ஊடகவியலாளராக  வணிகத்துறைசார்ந்த இதழ் ஒன்றில் செய்திகளை எழுத ஆரம்பித்து உள்ளார். 

1953 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக பத்தி எழுத்துத் துறையில் (Column writing ) ஆங்கிலம் – தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இலக்கிய கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார்.சினமா குறித்தும் எழுத ஆரம்பித்தார். 

ஒர் எழுத்தாளராக,  ஊடகவியலளராக,  ஆங்கில ஆசிரியராக  அறியப்படும் இவர் ஒலிபரப்பாளரும், ஒளிபரப்பாளரும் கூட. 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆங்கில சேவையில் செய்தி ஆசிரியராகவும் செய்திவாசிப்பாளராகவும், தமிழில் செய்தி வாசிப்பாளராகவும் கூட பணியாற்றியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். 

இலங்கையின் பிரதான இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளான வீரகேசரி ( இணை ஆசிரியர்) , நவமணி (பிரதம ஆசிரியர்) ஆகியவற்றின் ஆசிரிய பீடத்தில் மட்டுன்றி ‘த ஐலன்ட்’ , ‘டெயிலி நிவ்ஸ்’ என இரண்டு ஆங்கில பத்திரிகையிலும்  கூட பணியாற்றி இருக்கிறார். 

மாலைதீவுகள், ஓமான் போன்ற வெளிநாடுகளிலும், உள்நாட்டில் சர்வதேச பாடசாலைகளிலும் ஆங்கில ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவிலும் இரண்டு ஆண்டு காலம் வாழ்ந்துள்ளார். 

இவரது திறனாய்வு பத்தி  எழுத்துக்களும், சிறுகதைகளும், சினமா பற்றியதான பார்வைகளுமாக பல நூலாக்கம் பெற்றுள்ளன. 

சிவகுமாரன் கதைகள் – 1984- (ஜீவா பதிப்பகம் ), கலை இலக்கியத் திறனாய்வு – 1989- (தமிழ்மன்றம் வெளியீடு), 

கைலாசபதியும் நானும்-  1990- (தமிழ்மன்றம் வெளியீடு), 

திறனாய்வுப் பார்வைகள் – பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் – 01 – 1996- (செவ்வந்தி அச்சகம், கொழும்பு -13),

ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு – பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 03 – 1998- (செவ்வந்தி – கொழும்பு -13),

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் – பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் – 04- 1998- (யசீன் அச்சகம், கொழு- 12), 

இருமை ( சிறுகதைத்தொகுதி )  -1998- (தேசிய கலை இலக்கிய பேரவை ), 

ஈழத்து தமிழ் நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள் – பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 06 -1999 – (மீரா பதிப்பகம் ), 

மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் – பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் 05 -1999- (கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு- வடக்கு கிழக்கு மாகாணம்),

அசையும் படிமங்கள் – 2001- (மீராபதிப்பகம்), திறனாய்வு என்றால் என்ன? – 2004- (மணிமேகலைப் பிரசுரம் ), 

இந்திய – இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்- பதிப்பு-  2005 (மணிமேகலைப் பிரசுரம்), 

சினமா! சினமா! ஓர் உலக வலம் – 2006 (மீரா பதிப்பகம்),

பிறமொழிச் சிறுகதைகள் சில- 2007(மீராபதிப்பகம்),

மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் – பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் 07 – 2007 (மீராபதிப்பகம்), 

ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் – ஒரு பன்முகப் பார்வை (1980-1998)-  2008 (மணிமேகலைப் பிரசுரம்), 

ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் – ஒரு பன்முகப் பார்வை (1962-1979) -2008 (மணிமேகலைப் பிரசுரம்), 

ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை – 2008 (மணிமேகலைப் பிரசுரம்), 

ஈழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை – 2009 (மணிமேகலைப் பிரசுரம்), சொன்னாற்போல – 1 – 2008 (மீரா பதிப்பகம்) 

சொன்னாற்போல – 2 – 2008 (மீராபதிப்பகம்), சொன்னாற்போல – 3 – 2008 (மணிமேகலைப்பிரசுரம்), 

பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள் – 2009 (மீராபதிப்பகம்),

கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு மதிப்பீடுகள் சில – 2011(மீராப் பதிப்பகம்), சுவையான இலக்கிய திறனாய்வுகள் – 2011 (மணிமேகலைப் பிரசுரம்), 

ஒரு விமர்சகரின் இலக்கிய பார்வை – 2013 (மணிமேகலைப்பிரசுரம்),  

காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை -2013 (மணிமேகலைப் பிரசுரம்),

கே. எஸ். சிவகுமாரன் கண்களூடாக திறனாய்வு – 2013 (மீராபதிப்பகம்), 

பல நாடுகளில் வசிக்கும் வாசகர்களுக்கு பயனுள்ள குறிப்புகள் – 2013 (மணிமேகலைப் பிரசுரம்), முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம் – (மணிமேகலைப்பிரசுரம்) 

கலை இலக்கியப் பார்வைகள் 2014 (மீரா பதிப்பகம்) போன்ற  30 தமிழ் நூல்களை எழுதி உள்ளதுடன், 

Tamil Writing in Sri Lanka Tamil Writing in Sri Lanka – 1974 (Kumaran Publishers), 

Aspects of Culture in Sri Lanka- 1992- (Chamara printers), 

Gleanings – A Lankan’s Views as a Columnist -2019  ( Anamika Alphabet – Chennai) ஆகிய மூன்று ஆங்கில நூல்களையும் வெளியிட்டு உள்ளார். 

கடந்த இரண்டு வருடங்களாக சுகயீனமுற்றிருந்த நிலையில் நேற்றிரவு இவ்வுலகை விட்டு பிரிந்தார். 

மல்லியப்புசந்தி திலகர் அவர்களினால் எழுதப்பட்டு தமிழன் ‘தமிழ்முரசு’ இதழில் வெளியான கட்டுரை- 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here