இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள இராஜதந்திர உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.
இன்று வியாழக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தனது உரையின் போது, இலங்கையில் நிலவும் நிலைமை மற்றும் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மின்வெட்டு போன்ற அழுத்தமான பிரச்சினைகளை உள்ளடக்கிய அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக் காட்டினார்.
இது தொடர்பான நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் முனனெடுத்த நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், தேவைப்படும் நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு தூதுவர்களை கேட்டுக் கொண்டார்.