ஆருத்ரன் பிக்சர்ஸ் தயாரிப்பில், S.முருகன் வழங்க, அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள “கொஞ்ச நாள் பொறு தலைவா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் இலங்கையின் பிரபல கவிஞர் “அய்யோ சாமி” பாடல் புகழ் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.
பிரபல இயக்குநர் S.R. பிரபாகரன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, படத்தின் இசை இறுவட்டினை வெளியிட்டு வைத்தார். இதன்போது, அவர் பேசியதாவது:
“ஈழத்து கவிஞர் பொத்துவில் அஸ்மினை நான் நீண்ட காலமாக அறிவேன். அவரது பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளன. ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ திரைப்படத்திற்காக அவர் எழுதிய பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. அவரது எழுத்து தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதிக்கும்” எனக் குறிப்பிட்டார்.
இசையமைப்பாளர் சமந்த் நாக் இசையமைத்துள்ள இப்படத்தில், நாயகன் நிஷாந்த் ரூஷோ, நாயகியாக காயத்ரிஷான் நடித்துள்ளனர். மேலும் முக்கிய தாபாத்திரங்களில், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஷ்வின், சூப்பர் குட் சுப்ரமணியம், மற்றும் ஏராளமானோர் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக “ஜெயிலர்” புகழ் ஹர்ஷத் நடித்துள்ளார். சிங்கம்புலி சிறப்புத் தோற்றத்தில் கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும் படமாக “கொஞ்ச நாள் பொறு தலைவா” இருக்கும் என படக்குழுவினர் உறுதிப்படுத்தினர்.
இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.