இலங்கை கிரிக்கெட் அணி வீரருக்கு அவுஸ்திரேலியாவில் பிணை

0
261

பாலியல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் தடுப்புக்காவலில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கையை மறுபரிசீலனை செய்த சிட்னி நீதிமன்றம் இன்றையதினம் (17) அவரை பிணையில் விடுவித்தது.

அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த நவம்பர் 06ஆம் திகதி கைது செய்யப்பட்டு 11 நாட்களுக்குப் பின்னர் 150,000 அவுஸ்திரேலிய டொலர் ரொக்கப் பிணையில் அவரை விடுவித்துள்ள நீதிமன்றம், ஒரு குறிப்பிட்ட முகவரியில் வசிக்க வேண்டும் எனவும் தினமும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, தனுஷ்க மீது தினமும் இரவு 9.00 மணி முதல் காலை 6.00 மணி வரை வெளியில் நடமாடுவதை தடுத்து உத்தரவிட்டுள்ள நீதவான், Tinder உள்ளிட்ட டேட்டிங் செயலிகளை அணுகுவதற்கும் தடை விதித்துள்ளார்.

தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிட்னி யுவதி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து அண்மையில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலவை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிட்னி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here