உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, டில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (16) காலை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இதையடுத்து, இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, ஜனாதிபதி பீகாரில் உள்ள புத்த கயாவுக்குச் செல்ல உள்ளார்.