இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்க இ.தொ.க தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஜிவன் தொண்டமான் தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீண்ட கலந்துரையாடலுக்கு பின்னரே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜீவன் எம்.பி இன்று வேட்பாளராக களமிறங்கியுள்ள அனுர, டலஸுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.