இலங்கை அரசின் சார்பில் மலேசியாவின் 67வது தேசிய தின நிகழ்வு அனைமையில்(31) கொழும்பு கோல்பேஸ்(Galleface) விருந்தகத்தில் நடைபெற்றது.
இந்த தேசிய தின நிகழ்வின் விஷேட அதிதியாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்து சிறப்பித்திருந்தார்.
இதன் போது தொடர்ந்து சிறப்புரை நிகழ்த்திய போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்…
நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் நெருக்கமான பினைப்பு மற்றும் அவற்றை வலுப்படுத்துவதற்கான நமது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பற்றி பேசினார், குறிப்பாக முன்மொழியப்பட்டுள்ள இலங்கை-மலேசியா சுதந்திர வர்த்தகத்தின் புதிய ஒப்பந்தம் தொடர்பாக கருத்துரைத்தார்..
குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் காலப்பகுதியின் போது, இலங்கைக்கு மலேசியா அளித்த ஆதரவிற்கும் தனது நன்றியை தெரிவித்திருந்தார்..
மேலும் அமைச்சர் மலேசியாவில் வசித்த காலப்பகுதிகளில், தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதோடு, இன்று நான் யார் என்பதை அடையாளப்படுத்தியமைற்காக மக்கள் ஆற்றிய பங்கிற்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
நமது இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு தொடர்ந்து செழித்து வளரும் என்பது எனது இடைவிடா நம்பிக்கையா உள்ளமையை என சுட்டிக்காட்டினார்.
இந் நிகழ்வில் இலங்கைக்காக மலேசிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு பட்லி ஹிஷாம் ஆடம், மற்றும் மேலும் பல இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
Media -unit