இலஞ்சம் பெற்ற நீர்பாசன திணைக்கள எந்திரியும் அவரின் வாகன சாரதியும் விளக்கமறியலில்

0
129

 அம்பாறை அக்கரைப்பற்றில் காணி ஒன்றில் மண் நிரப்புவதற்கான அனுமதி பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் 2 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற நீர்பாசன திணைக்கள எந்திரியும் அவரின் வாகன சாரதியையும் எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று நீர்ப்பாசன திணைக்களத்தின் கடமையாற்றிவரும் எந்திரி  தனது காணிக்கு மண் நிரப்புவதற்கு அனுமதி பெறுவதற்காக  இலஞ்சம் கோரியதாக ஒருவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு  செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து இலஞ்;ச ஊழல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான கடந்த புதன்கிழமை (12)  அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள நீர்பாசன காரியாலயத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மாறு வேடத்தில் காத்திருந்தனர்.

அதன் போது அங்கு நீர்ப்பாசன எந்திரி கோரிய பணத்துடன் குறித்த நபர்   எந்திரியின் வாகன சாரதியுடன் சென்று இலஞ்சாமக கோரிய 2 இலச்சம் ரூபாவை பணத்தை எந்திரியிடம் வழங்கும் போது அங்கு மாறு வேடத்தில் இருந்த  மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் பணத்துடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்திய போது இவர்களை எதிர்வரும் 27 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

(க.சரவணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here