இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 1,800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை 1,861 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுதொடர்பில் 620 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதற்கு மேலதிகமாக சொத்துக்கள் தொடர்பான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் 64 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுமார் 50 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முறைப்பாடுகள் தொடர்பில் நிறுவன மட்டத்தில் 72 அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதுடன் மேலும் 328 முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காக ஏனைய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது