தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் கலைஞர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இளங்கலை இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னர், திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்குத் தேவையான வசதிகளைக் கோரியிருந்தார். அதற்கமைய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட பாதுகாப்பின் கீழ், தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நலையில் குறித்த கற்கைக்கான பரீட்சை எதிர்வரும் 4ஆம் திகதி திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான இறுதியாண்டு பரீட்சை நடைபெறவுள்ளது.
மேலும், ராமநாயக்கவை பரீட்சைக்கு பங்குபற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தநாயக்க ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.