இளைஞர்களுக்கிடையில் மோதல்; உடப்புஸல்லாவை இளைஞன் பலி

0
443

இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 19 வயது இளைஞரொருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவமொன்று உடப்புஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரப்பாணக் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ரப்பாணக் தோட்டத்தை சேர்ந்த ஐவர் கொண்ட இளைஞர் குழு ஒன்றுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், வி. தனோஷன் (வயது -19) என்ற இளைஞர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 21 வயதுடைய இளைஞர் ஒருவரும் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உடப்புஸ்ஸலாவை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சமபவத்துடன் தொடர்புடையதான இளைஞரொருவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதுடன் சம்பவத்தில் ஈடுப்பட்ட மேலும் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here