பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்க அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் விடுத்திருந்தது.
கடந்த மாதம் (21) தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியை வலுவற்றதாக்கி எழுத்தானை உத்தரவு பிறப்பிக்குமாறு 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் இன்று (03) மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளினால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தொழில் அமைச்சு வெளியிட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தடை உத்தரவு வழங்க முடியாதென உத்தரவிட்டுள்ளனர்.
நீதிமன்றம் உழைத்து வாழும் தோட்ட தொழிலாளர்களுக்கு நீதி வழங்கியுள்ளது என மகிழ்சி தெரிவித்தும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கு நன்றி தெரிவித்தும் இராகலை நகரில் வெடி வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
ஆ.ரமேஸ்.