உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜுலையில்

0
374

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது பிரயோக பரீட்சைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இதற்காக கம்பிகள், ஆளிகள் மற்றும் மின்குமிழ்கள் போன்றவற்றை கொள்வனவு செய்ய பெருந்தொகை பணத்தை செலவிட நேரிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நாட்களில் நடத்தப்பட்டு வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பரீட்சையில் ஒருவருக்கு பதிலாக மற்றுமொருவர் பரீட்சையில் தோற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here