‘பெருந்தோட்ட மக்களினுடைய வாழ்விலே ஒளி ஏற்றுவோம்’ எனும் தொனிப்பொருளில் கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவன அனுசரணையில் மத்திய மாகாண சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா , கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2023 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ள பெருந்தோட்ட மாணவர்கள் சுமார் 30 பேருக்கு புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் இன்று நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 10,000 ரூபா வழங்கப்பட்டது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கரிதாஸ் செட்டிக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை டெஸ்மண்ட் பெரேரா அடிகளார் , நுவரெலியா மறைக்கோட்ட ஆயர்பதிலால் அருட்தந்தை ஆண்டனி பெர்ணான்டோ அடிகளார், மௌலவி யாசின் , சுரேஷ் சர்மா குருக்கள் , பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ,பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மலையக பெருந்தோட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்ற விகிதாசாரத்தை உயர்த்துகின்ற வகையில் ஊக்குவிப்பு திட்டமாக புலமை பரிசில் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.